போட்டோசாப் டூல்ஸ் பாகம் - 1 (Photoshop Tools Part - 1)

வணக்கம் நண்பர்களே !
இந்தப் பாடத்தில் போட்டோசாப் டூல்ஸ் பற்றி பார்ப்போம்

Rectangular Marquee ToolElliptical Marquee Tool
Rectangular Marquee Tool சதுரம் மற்றும் செவ்வகம் வடிவிலும் Elliptical Marquee Tool வட்டம் மற்றும் நீல் வட்டம் வடிவிலும் தேவையான படத்தை வெட்டவும், வெட்டிய படத்தை வேறொரு இடத்தில் Paste செய்யவும் பயன்படுகிறது.
நீங்கள் Select செய்யும் இடத்தை தேவைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க கீழே உள்ள 4 டூல்கள் பயன்படுகின்றன. இவை Tools Box க்கு மேல் இருப்பதை பார்க்கலாம்.
New Selection
Add Selection
Subtract from Selection
Intersects with Selection

![]() |
படம் - 1 |
இந்த Rectangular Marquee Tool ஐ Select செய்தவுடன் தானாக இந்த New Selection டூல் Enable ஆகும். இந்த டூல் மூலம் Image ல் தேவையான இடத்தை Select செய்ய பயன்படுகிறது. படம் 1 ஐ பார்க்க.

![]() |
படம் - 2 |
இந்த டூல் மூலம் மேலும் புதிய இடத்தில் Select செய்ய பயன்படுகிறது. இதற்கான (Shortcut key Shift) படம் 2 ஐ பார்க்கக

![]() |
படம் - 3 |
ஏற்கனவே select செய்த இடத்தை உங்களுக்கு தேவையில்லாத இடத்தை Unselect செய்ய இந்த டூல் பயன்படுகிறது. (Shortcut key Alt) படம் 3 ஐ பார்க்க

![]() |
படம் - 4 |
இந்த டூல் நிங்கள் ஏற்கவே New Selection டூல் மூலம் Select செய்த இடத்தில் உங்களுக்கு தேவையான இடம் தவிர்த்து மற்ற இடங்களை Unselect செய்ய இந்த டூல் பயன்படுகிறது. (Shortcut key Alt + Shift) படம் 4 ஐ பார்க்க
Elliptical Marquee Tool க்கும் இந்த 4 selection டூல்களும் பொருந்தும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் சமூக வளைதளங்களில் பகிருங்கள் மேலும் புதிய பதிவுகளை பெற இன்றே இனைந்து கொள்ளுகள்
நன்றி !
Post a Comment