(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

போட்டோசாப் டூல்ஸ் பாகம் - 2 (Photoshop Tools Part - 2)


Move Tool

படத்தை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தி செல்ல இந்த டூல் பயன்படுகிறது.












நீங்கள் ஒரு படத்தை உளளே கொண்டு வந்து அதை நகர்த்த முயற்சி செய்தால் மேலே உள்ளதுபோல் (Error Message) இந்த Layer, Lock செய்யப்பட்டுள்ளது என்று வரும். படம் 1 ஐ பார்க்க



பொதுவாக ஒரு படத்தை நீங்கள் உள்ளே கொண்டு வந்தால் தானாக அது Lock செய்யப்பட்டிருக்கும். (படம் 2 ஐ பார்க்க) இந்த Lock ஐ எடுக்க வலது பக்கம் உள்ள Layers Box இல் அந்த படத்திற்கு Lock செய்யப்பட்டிருப்பதை பாரக்கலாம்.



படத்தை Unlock செய்ய அதில் Double click செய்ய வேண்டும். அப்படி செய்தவுடன் ஒரு New Layer என்று சிறிய பெட்டி வரும். படம் 3 ஐ பார்க்க இதற்கு நீங்கள் விரும்பினால் இந்த படத்திற்கு பெயர் கொடுக்கலாம்.



அடுத்து Ok வை Click செய்தவுடன் அந்த படம் Layars Box ல் Unlock செய்யப்பட்டிருக்கும். படம் 4 ஐ பார்க்க

இப்பொழுது உங்கள் படத்தை நீங்கள் விரும்பியவாறு என்த இடத்திற்கும் நகர்த்திக் கொள்ளலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் சமூக வளைதளங்களில் பகிருங்கள் மேலும் புதிய பதிவுகளை பெற இன்றே இனைந்து கொள்ளுகள்

நன்றி !

No comments