(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பாடலில் இருந்து இசையை மட்டும் பிரித்தெடுப்பது எப்படி?

பாடலில் இருந்து இசையை மட்டும் பிரித்தெடுக்க!

வணக்கம் தமிழ் நண்பர்களே ! இன்று நாம் பர்க்கப் போவது பாடலில் இருந்து இசையை மட்டும் பிரித்தெடுக்கும் ஒரு அருமையான மென்பொருளைப் பற்றி.
அது Audacity என்ற இலவச மென்பொருள்.



இந்த மென்பொருளுக்கான தறவிறக்கச் சுட்டி

http://adfoc.us/19739635778938

மென்பொருளை பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். இந்த மென்பொருளை பயன்படுத்தி இசையை பிரித்தெடுக்கும் முறையை பார்ப்போம். முதலில் மென்பொருளை திறந்து கொள்ளுங்கள். அடுத்து File > Open சென்று உங்களுக்கு பிடித்த பாடலை தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து Effects > Vocal Remover வை தேர்ந்தெடுக்கவும்.


மேலே உள்ளது போல் ஒரு விண்டோ திறக்கும். அதில் Removel Choice ல் Simple (entire spectrum) என்பதை தேர்ந்தெடுக்கவும் பிறகு Ok பட்டனை கிளிக் செய்யவும்.


இப்பொழுது மேலே உள்ள படத்தைப் போல் கட்டளைக்குன்டான ப்ராசசிங் நடக்கும். பாடலை பிளே செய்து சரியாக வந்துள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அடுத்து முக்கியமான ஒன்று பிரித்ததை கணினியில் சேமிப்பது (save) எப்படி? என்பதைப் பார்ப்போம். பொதுவாக பாடல் கோப்புகள் mp3 என்ற பார்மெட்டில் தான் இருக்கும். ஆகையால் பிரித்த பாடலை mp3 சேமித்துக் கொள்ளலாம். (இன்னும் பல வகையான ஆடியோ கோப்புகளுக்கு மாற்றியும் சேமிக்கலாம்) அதற்கு முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் சென்று பதிவிறக்கி கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

http://adfoc.us/19739635864558


அடுத்து File சென்று Export ஐ தேர்ந்தெக்கவும். அடுத்து வரும் விண்டோவில், சேமிக்கும் இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். File Name ல் பாடலின் பெயரை குறிப்பிட்டு Save as Type ல் MP3 Files ஐ செலக்ட் செய்து Save பட்டனை சொடுக்கவும்.


அடுத்ததாக மேலே உள்ளதுபோல் விண்டோ வரும் அதில் பாடலை பாடியவர், இசையமைத்தவர், எழுதியவர் என பல விவரங்கள் இருக்கும் இந்த விவரத்தை மாற்ற வேண்டும் என்றால் மாற்றிக் கொள்ளலாம் இல்லையென்றால் அப்படியே விட்டுவிடலாம். அடுத்து Ok வை சொடுக்கவும்.
அவ்வளவுதான் இசையை மட்டும் பிரித்த பாடல் உங்கள் கணினியில் சேமிக்கப்பட்டுவிடும்.

அப்படி உருவாக்கிய இரண்டு பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பதிவைப்பற்றிய உங்களது கருத்துக்கள்

2 comments:

  1. நன்றாக வேலைச் செய்கிரது மிக்க நன்றி அண்ணா!!!
    //இருப்பினும் சற்று பின்னனி குரல் இருக்க தான் செய்கிரது//

    ReplyDelete
  2. இந்த மென்பொருள் மூலம் பின்னனி குரல் (Echo) அதிகப்படுத்தலாம், ஆனால் இது இசையோடு சேர்ந்தது வருவதால் எடுக்க முடியாது.

    ReplyDelete