(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

போட்டோசாப் மூலம் அனிமேசன் (Animation GIF) படங்களை உருவாக்குவது எப்படி?

போட்டோசாப் மூலம் அனிமேசன் GIF படங்களை உருவாக்குவது எப்படி?


GIF இதன் அர்த்தம்  Graphics Interchange Format. இது அசையும் தன்மை கொண்ட வகை படங்கள் ஆகும். இது இனையத்தில் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். சமூக வளைதளங்களிளும், விளம்பரபேணர்களாகவும் உபயோகப்படுத்தியிருப்பதை நாம் பார்த்திருப்போம். அத்ததைய அசையும் நிழற்படங்களை போட்டோசாப் மென்பொருள் மூலம் அதை உருவாக்குவது எப்படி? என்பதைப் பற்றி இன்று நாம் பார்க்கப்பேகிறோம்.

 

முதலில் போட்டோசாப் திறந்து கொள்ளுங்கள். அடுத்து File > New சென்று உங்களுக்குத் தேவையான அளவுகளைக் கொடுத்து ஒரு புதிய டாகுமென்டை திறந்து கொள்ளுங்கள். அடுத்து வரும்
விண்டோவில் (நீங்கள் ப்ளாக் விளம்பர பேணர் உருவாக்குகிறீர்கள் என்றால்) width ல் 200 Pix Height ல் 250 Pix கொடுத்தால் போதுமானது. பெரிய சைசாக வேண்டுமென்றால் அளவுகளை மாற்றிக் கொள்ளலாம்.
 

பிறகு window Tab ல் சென்று Animation window வை திறந்து கொள்ளுங்கள்.


இந்த டாகுமென்டில் நீங்கள் எழுத விரும்புவதை டைப் செய்து கொள்ளுங்கள்.



அடுத்து மேலே எண் 1 சிகப்பு குறி காட்டப்பட்ட இடத்தில் கிளிக் செய்து வரும் விண்டோவில் உங்களுக்கு எத்ததை பிரேம் வேண்டும் என்பதை செட் செய்து கொள்ளுங்கள். (நான் 4 பிரேம்களை கொடுத்துள்ளேன்)
அந்த அந்த 4 பிரேம்களுக்கும் வேறு விதவிதமான பேக்ரவுண்ட் வண்ணங்களைக் கொடுங்கள். (விருப்பம் என்றால் இது விளம்பர பேணர் என்பதால் பேக்ரவுண்ட் ஒன்று இருந்தால் போதும்) மற்றும் எழுத்துக்களுக்கும் Layer > Layer Style > Blending Options சென்று உங்களுக்கு விருப்பமான வண்ணங்கள், எஃபைட்டுகள் கொடுங்கள்.

 
முதல் பிரேமில் கொடுக்கும் வண்ணங்கள் மற்ற பிரேம்களுக்கு வரக்கூடாது. அதனால் வண்ணங்களை நேரடியாக கொடுக்காமல் blending Options ல் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பிரேமிற்கும் தனித்தனி பேக்ரவுண்ட் இமேகஜ்களை கொடுக்க வேண்டும் என்று நீஙகள் விரும்பினால்  (நான் கொடுத்திருப்பது போல்) 4 பேக்ரவுண்ட் இமேஜ்களை டாகுமென்ட் உள்ளே கொண்டுவந்து  வைத்துக் கொள்ளுங்கள்.


இந்த பேரா முழுவதும் கவனமாக படிக்கவும் இல்லையென்றால் சரியாக புரியாது.

அடுத்து முதல் பிரேமில் ஒரு பேக்ரவுண்ட் தெரிய வைத்து மற்ற மூன்று பேக்ரவுண்ட் இமேஜ்களை மறைத்து (HIDE) வைக்க வேண்டும். (இந்த நான்கு Layer களுக்கும் background 1,2,3,4 என பெயரிட்டுக்கொள்ளலாம். குழப்பம் வராமல் இருக்கும்) இரண்டாவது பிரேமில் இரண்டாவது பேக்ரவுண்ட் தெரியும்படி வைத்துவிட்டு மற்ற மூன்று 1,3 மற்றும் 4 பேக்ரவுண்ட் இமேஜ் லேயர்களை மறைக்க வேண்டும். மூன்றாவது பிரேமில் 3வது பேக்ரவுண்ட் தெரியும்படி வைத்துவிட்டு 1,2 மறறும் 4 பேக்ரவுண்ட் இமேஜ் லேயர்களை மறைக்க வேண்டும். 4வது பிரேமில் 4வது பேக்ரவுண்ட் தெரியும்படி வைத்துவிட்டு 1,2 மறறும் 4 பேக்ரவுண்ட் இமேஜ் லேயர்களை மறைக்க வேண்டும். இவ்வாறு சரியாக செட் செய்ய வேண்டும். (கீழே கொடுக்கப்பட்ட படத்தில் சிகப்பு அம்புகுறி இட்டு காட்டிய இடத்தில் கிளிக் செய்தால் அந்த லேயர் மறைக்கப்பட்டுவிடும்)


அடுத்ததாக அனிமேசன் பிரேம்கள் எவ்வளவு வேகத்தில் இயங்க வைக்க வேண்டும். என்பதை அமைக்க வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் அம்புகுறி 1 ல் உள்ளவாறு 4 அனிமேசன் பிரேம்களை செலக்ட் செய்து கொண்டு அம்புகுறி 2 ல் காட்டிய இடத்தில் கிளிக் செய்து அதில் நீங்கள் விரும்பிய வேகம் கொடுத்துக் கொள்ளுங்கள் (இது என்ன வேகம் என்றால்! ஒரு பிரேமிலிருந்து அடுத்த பிரேமிற்கு மாறும் வேகம். விளம்பர பேணருக்கு 0.5 sec வேகம் போதுமானது )

 

செட் செய்தது சரியாக வந்துள்ளதா என்பதை பார்க்க இந்த play பட்டனை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம்.



இப்பொழுது அனைத்து வேலைகளையும் முடிச்சாச்சு. அடுத்து இதை அனிமேசன் (GIF) பைலாக சேமிப்பது எப்படி?
அதற்கு File சென்று Save for web devicees கிளிக் செய்யயும் (கீழே உள்ள விண்டோ போல் வரும்) இதற்கு குறுக்கு விசை alt+ctrl+shift+S 
 

கீழே உள்ள படத்தைப் போல் பார்மட் (Format) மட்டும் GIF தேர்ந்தெடுக்துக்கொள்ளவும். அம்புகுறி 2ல் ஒரு முறை மட்டும் அனிமேசன் வேண்டும் என்றால் Ones நிற்காமனல் வரவேண்டும் என்றால் Forever . (இந்த செட்டிங் தேவை என்றால் மட்டும் கொடுக்கவும்)


எல்லம் முடித்த பின்பு கடைசியாக Save பட்டனை கிளிக் செய்து வரும் விண்டோவில் தேவையான இடத்தை தேர்வு செய்து சேமித்துக்கொள்ளுங்கள்.


இந்த முறையைப் பயன்படுத்தி உருவாக்கிய அனிமேசன் பேணர்கள் உங்கள் பார்வைக்கு ............










இந்த பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.


கீழே உள்ள ஓட்டுபட்டைகளில் ஓட்டளித்து நம் அனைத்து தமிழ் நண்பர்களும் பயனடைய உதவுங்கள்.

No comments