(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

போட்டோசாப் Actions என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?







போட்டோசாபில் Actions என்பது மிக முக்கியமான ஒன்றாகும். போட்டோசாப் Actions என்பது நாம் போட்டோசாபில் செய்யும்  வேலைகளை பதிவு செய்வதே இதன் வேலை ஆகும்.

சரி இந்த Actions எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.

இந்த Actions போட்டோசாபின் வலது பக்கம் Actions என்ற சிறிய விண்டோ இருப்பதை பார்க்கலாம். அப்படி இல்லையென்றால் உங்கள் கீ போர்டில் Alt+F9 என்பதை அழுத்துங்கள் அல்லது Window>Actions சென்று Actions விண்டோவை திறந்து கொள்ளுங்கள்




Actions விண்டோவில் கீழே இங்கே காண்பதுபோல் சில பட்டன்கள் இருக்கும்.




இவை…


இப்பொழுது போட்டோ அல்லது New File ஓப்பன் செய்வதற்க்கு முன்னால் இந்த Create New Action என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து இங்கே காண்பதுபோல் சிரிய விண்டோ ஓப்பன் ஆகும்



இதில்  Name ல் நீங்கள் விரும்பும் பெயரை குறிப்பிட்டு Record என்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்பொழுது நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளும் இந்த Actions ல் பதிவு செய்து கொண்டிருக்கும்.



Actions ல் Record செய்யப்பட்டதை Save செய்து கொள்ளுங்கள். எப்படி Save செய்வது என்றால். இங்கு கீழே அம்புகுறியிட்டு காட்டிய இடத்தில் கிளிக் செய்து Save Actions… என்பதை கிளிக் செய்யுங்கள்





அடுத்து வரும் விண்டோவில் எந்த இடத்தில் Save செய்கிறீர்கள் என்று தேர்ந்தெடுத்து, File Name ல் பெயரை குறிப்பிட்டு Save பட்டனை கிளிக் செய்து நீங்கள் Record செய்த Action ஐ Save செய்திடுங்கள்.

இப்பொழுது நீங்கள் Save செய்த Action ஐ எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம். போட்டோசாபை குளோஸ் செய்து விட்டு மறுதொடக்கம் செய்யுங்கள்.

நீங்கள் ஏற்கனவே Save செய்து வைத்திருந்த Action ஐ டபுல்கிளிக் செய்து ஓப்பன் செய்யுங்கள். அந்த Action போட்டோசாபில் Actions விண்டோவில் நிருவப்பட்டுவிடும் 



அடுத்ததாக கீழே காட்டபட்டுள்ளது போல் Play பட்டனை கிளிக் செய்யுங்கள்.



Play பட்டனை கிளிக் செய்தவுடன் ஆட்டோமேட்டிகாக நீங்கள் முன்பு செய்த அனைத்து வேலைகளையும் இப்பொழுது செய்துமுடிக்கும். இதுவே Actions ன் வேலை ஆகும்.

நான் உருவாக்கியா Actions பதிவிறக்கி பயன்படுத்தி பாருங்கள்…

Actions 1 Click Here
Actions 2 Click Here
Actions 3 Click Here
Actions 4 Click Here
Actions 5 Click Here
Actions 6 Click Here

இந்த பாடத்தை PDF வடிவில் பெற விரும்பும் நண்பர்கள் எனது மின் அஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.
Perumalmanikkam@gmail.com

நன்றி...






2 comments:

  1. photoshop action பற்றி மிக தெளிவாக விளக்கி இருக்கிர்கள்.எனது முதல் வருகையிலே உங்கள் தளத்தின் உறுப்பினராகிவிட்டேன்.

    ReplyDelete
  2. நண்பரே உங்கள் பாடங்கள் அனைத்தும் அருமை. உங்களது அடிப்படை பாடங்களை PDF FIle ஆக அனுப்பி உதவுங்கள் நண்பரே

    sukukpm@gmail.com

    ReplyDelete