(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

போட்டோசாப் மூலம் கண் கருவிழி மற்றும் உதடு லிப்ஸ்டிக் கலரை மாற்றுவது எப்படி?



தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். போட்டோசாப் மூலம் கண் கருவிழி கலர் மற்றும் உதடு லிப்ஸ்டிக் கலரை மாற்றுவது பற்றி இந்த பாடத்தில் பார்ப்போம்.


1. முதலில் உங்கள் போட்டோ அல்லது உங்களுக்கு விருப்பமான போட்டோவை File > Open சென்று போட்டோசாபிற்குள் கொண்டு வாருங்கள்.



2.  அடுத்ததாக கண்கள் கருவிழி மட்டும் Polygoal Lasso Tool அல்லது Pen Tool மூலமாக வெட்டுங்கள்.



3. வெட்டியவுடன் Layer > New > Layer Via Copy என்பதை கிளிக் செய்யவும் இப்பொழுது ஒரு புதிய லேயராக வந்திருப்பதை காணலாம்.



4. வெட்டிய லேயரை செலக்ட் செய்து கொண்டு Image > Adjustments > Hue/Saturation என்பதை கிளிக் செய்யவும்.



5. அடுத்த வரும் விண்டோவில் Colorize என்பதை டிக் செய்து கொண்டு உங்களுக்கு விருப்பமான கலரை தேர்ந்தெடுங்கள். பிறகு Ok வை கிளிக் செய்யுங்கள்.


உதடு லிப்ஸ்டிக் கலரை மாற்றுவதற்கும் மேலே குறிப்பிட்ட 1 முதல் 5 வரையான  முறைகளைப் பயன்படுத்தி மாற்ற வேண்டும்.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் சமூக வளைதளங்களில் பகிருங்கள். முடிந்தால் கீழே உள்ள ஓட்டுபட்டைகளில் ஓட்டளித்து நம் அனைத்து தமிழ் நண்பர்களும் பயனடைய உதவுங்கள்.
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !!

6 comments: