(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கோரல்டிரா கற்றுக் கொள்ளுங்கள் !




கோரல்டிரா என்றால் என்ன ?
இது ஒரு வடிவமைப்பு மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் கட்டணம் செலுத்தி பெற வேண்டும். இந்த மென்பொருள் கோரல் கார்ப்ரேசன்  Corel என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
கோரல்டிரா முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. இதன் கடைசி பதிப்பான Corel Draw Graphic Suite X6 கடந்த வருடம் மார்ச் மாதம் 20 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.

சிறப்பம்சங்கள் :-
நாம் மனதில் நினைத்த ஒன்றை இதன் மூலம் வரைய முடியும். இதில் மில்லி மீட்டர் முதல் கிலோ மீட்டர் வரையிலான அளவுகளை வரைய முடியும். இந்த மென்பொருள் பல இடங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதில் வரையப்படும் வடிவமைப்புகள் மற்ற வடிவமைப்பு மென்பொருக்கு ஏற்றவாறு Export செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

Corel Corporation ன் இதர படைப்புகள்.

Corel CAD

Corel PaintShop pro

Corel AfterShop pro

Corel  PhotoPaint

Corel Video Studio

Corel Win DVD

Corel Word Perfect 

Corel Painter

மேலும் பல வகையான படைப்புகள் உள்ளன அவைகளை
இந்த வளைதளத்திற்குச் சென்று பார்க்கலாம்

கோரல்டிரா கற்பதன் பயன் :-
நமக்குத் தேவையான வடிவமைப்புகளை நாமளே உருவாக்கிக் கொள்ளலாம். விசிட்டிங் கார்ட்கள், பிளாக் பேனர்கள், நோட்டிஸ்கள், டிஜிட்டல் பேனர்கள் மற்றும் இன்னும் பலவகையான வடிவமைப்புகளளை இந்த மென்பொருள் மூலம் உருவாக்கலாம். இதை நாம் கற்பதால் மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கலாம்.


இந்த மென்பொருளை இலவசமாக பெறுவது பற்றியும், இன்ஸ்டால் செய்வது பற்றியும் அடுத்த பாடத்தில் பார்ப்போம்.

1 comment:

  1. பயனுள்ள தகவல்கள்... வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete